உள்நாடு

ரயில் கட்டணத்தை 50% அதிகரிக்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – ரயில் கட்டணத்தை 50% அதிகரிக்குமாறு அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளாந்த புகையிரதப் பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், பயணிகளிடம் இருந்து அறவிடப்படும் குறைந்த கட்டணத்தினால் ஏற்படும் எரிபொருளுக்கான செலவை திணைக்களத்தினால் ஈடுசெய்ய முடியாதுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர், புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு ஒரு ரயில் 100,000 லீட்டருக்கு மேல் எரிபொருளைப் பயன்படுத்துவதால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என செனவிரத்ன தெரிவித்தார்.

புகையிரத கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ள அதேவேளை, பாராளுமன்றத்தின் அனுமதியும் பெறப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ரயில்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் திணைக்களத்திடம் இன்னும் இருப்பதாகவும் செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.

Related posts

கடலில் இருந்து எங்களைக் காப்பாற்றிய இலங்கைக்கு நன்றி – தரையில் உயிரிழக்க விடப்பட்டுள்ளோம் – ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் ரோஹிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டம்

editor

இன்று அதிகாலை முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

editor

 வெளிநாடு செல்ல முடியாததனால் உயிரை விட்ட இளைஞன்