உள்நாடு

எரிபொருள் கப்பல் இன்று நாட்டுக்கு

(UTV | கொழும்பு) –   40,000 மெற்றிக் தொன் பெட்ரோல் ஏற்றி வரும் கப்பல் நேற்று (ஜூன் 23) காலை இலங்கைக்கு வரவிருந்த நிலையில், கப்பல் வருவதற்கு ஒரு நாள் தாமதமாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் இன்று (ஜூன் 24) இலங்கையை வந்தடைய உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் காரணமாக இன்றும் நேற்றைய தினமும் குறைந்த அளவிலான பெட்ரோல் நாடு பூராகவும் விநியோகிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதிகபட்ச கொள்ளளவிற்கு ஓட்டோ டீசல் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், சுப்பர் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி-பொதுநலவாய செயலாளர் நாயகம் இடையில் சந்திப்பு!

மேலும் 08 கடற்படையினர் குணமடைந்தனர்

ராஜபக்ஷ அரசுடன் எவ்வித கணக்குகளையும் நாம் வைத்துக் கொள்ளவில்லை [VIDEO]