உள்நாடு

முன்னாள் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மே 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய சந்தேகநபர் இன்று கொழும்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அடையாள அணிவகுப்பிற்காக நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இன்று மழையுடன் கூடிய காலநிலை

பியூமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

சிறையில் திலினி பிரியமாலியிடம் சிக்கியது கைப்பேசி