உள்நாடு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாவலர் தற்கொலை

(UTV | கொழும்பு) –   கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமையப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வீட்டுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

editor

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென தீர்மானம்

ரஷ்யாவிடமிருந்து 50,000 Sputnik V வந்தடைந்தது