உள்நாடு

மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பு : மி.மீ. 100க்கு மேல் பலத்த மழை

(UTV | கொழும்பு) –  நாட்டில் இன்றும் (31) மற்றும் அடுத்த சில நாட்களில் மழை மற்றும் காற்றின் அளவு சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் மி.மீ. 100க்கு மேல் மழை பெய்யக்கூடும்.

அனுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மிதமான காற்று வீசும். மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

உடனடியாக நடைமுறைக்கு வரும் குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நியமனம்

editor

18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

editor

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அழைப்பு