வகைப்படுத்தப்படாத

கீதாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்து மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்தது

(UDHAYAM, COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச்செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்வரும் 15ம் திகதி வரை இடைநிறுத்தம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தீர்ப்பிற்கு எதிராக கீதா குமார சிங்க தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதவான் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதேபோல் , அவர் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 15ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புவனெக அலுவிகாரே , பிரியந்த ஜயவர்தன , அனில் குணரத்ன போன்ற உயர்நீதிமன்ற  நீதவான் குழு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Discount bonanza from SriLankan

EU to take migrants from Alan Kurdi rescue ship

ஜனாதிபதி நாளை அவுஸ்திரேலியாவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கிறார்