உள்நாடு

ஜோன்ஸ்டனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஒரு குழுவினர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி போராட்டம் நடத்தும் இடமான கோட்டகோகமவில் இருந்து இந்த குழுவினர் வருகை தந்துள்ளனர்.

மைனாகோகம மற்றும் கோட்டாகோகம மீதான தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

தலவாக்கலையில் 4 சிறுவர்களை காணவில்லை

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்

பேரூந்துக்கான புதிய பயணக் கட்டண விபரங்கள்