உள்நாடு

ஹரின், மனுஷ கட்சியில் இருந்து இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி இடைநிறுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு வழங்கி இணைந்தமை தொடர்பிலேயே கட்சி இந்த தீர்மானத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்றைய அமைச்சர்கள் பதவியேற்பில் ஹரின் பெர்னாண்டோவுக்கு சுற்றுலா அமைச்சும் மனுஷ நாணயக்காரவுக்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு நாளை!!

editor

இலங்கையில் 8 வது மரணமும் பதிவு

திட்டமிட்டபடி இலங்கைக்கு LNG விநியோகிக்கப்படும் : New Fortress Energy