உள்நாடு

நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை தோல்வி

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இனால் முன்வைக்கப்பட்ட நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளாலும் ஆதரவாக 60 வாக்குகளாலும் தோற்கடிக்கப்பட்டது.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் இலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில், பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

Related posts

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா

சுமந்திரன், சாணக்கியனின் துணிச்சலான முடிவு வரவேற்கத்தக்கது – திகாம்பரம் எம்.பி

editor

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

editor