உள்நாடு

“நாடாளுமன்ற கலாச்சாரத்தை மாற்றுவோம்” – பிரதமர்

(UTV | கொழும்பு) –  “நாடாளுமன்ற கலாச்சாரத்தை மாற்றுவோம். அதற்காக பாராளுமன்றத்தின் தேசிய சபையை நிறுவுவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (17) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

“இந்த கலாச்சாரத்துடன் நாம் முன்னேற முடியாது. முதலில் இதை சரி செய்வோம். அதற்கு பின்னர் பேசலாம். நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. அடுத்த வாரம் பொருளாதாரம் பற்றி பேசவுள்ளோம். இரு தரப்புக்கும் கூறுகிறேன். இந்த கலாச்சாரத்தை மாற்றுங்கள். இப்படியே ஒரு வாரம் சென்றால், நமக்கு வருவதற்கு ஒரு பாராளுமன்றத்தை இழக்க நேரிடும், ” என்று பிரதமர் கூறினார்.

Related posts

சர்ச்சைக்குரிய மத போதகர் விவகாரம்- ஜம்மியதுல் உலமா அறிக்கை

இந்திய உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு

மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம்