உள்நாடு

‘மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்’ – சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – நேற்றைய தினம் (09) இடம்பெற்ற மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவரது சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (10) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

நேற்றைய தினம் தாக்குதல் நடாத்தப்படுமென பொலிசார் காத்திருந்ததாகவும் குணரத்ன வன்னிநாயக்க மேலும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்திய வன்னிநாயக்க, இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியதாகக் கூறினார்.

எனவே இவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சட்டத்தரணி வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்வரும் 4 மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ள விதம்

அபராத கட்டணங்கள் செலுத்தும் சலுகை காலம் நீடிப்பு

சட்டவிரோத ஹம்மர் ரக வாகனங்கள் சுங்கத்துறை பிடியில் சிக்கியது