உள்நாடு

மஹிந்த இன்று SLPP உறுப்பினர்களை சந்திக்கிறார்

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் மே மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியிருந்தனர்.

மாற்று அரசாங்கமொன்றை அமைக்க முடியும் என்ற உத்தரவாதத்திற்கு உட்பட்டு பதவி விலகுவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவி விலகலை அறிவிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Related posts

சிகிச்சைகளை தவிர்ப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்

கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளன – அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? சஜித் பிரேமதாச கேள்வி

editor