உலகம்

ட்விட்டர் பயனர்களிடமிருந்து கட்டணம் அறவிட யோசனை

(UTV | கொழும்பு) –  டெஸ்லாவின் தலைவர் எலோன் மஸ்க், ட்விட்டர் சமூக ஊடக வலையமைப்பை வணிக மற்றும் அரசாங்க நோக்கங்களுக்காக பயன்படுத்த எதிர்காலத்தில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்திற்கான எலோன் மஸ்க் $44 பில்லியன் ஏலத்திற்கு ட்விட்டர் வாரியம் ஒப்புதல் அளித்ததை அடுத்து அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

எனினும் சாதாரண பயனாளர்களுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் சமூக ஊடக வலையமைப்பை புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதை விட உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் முன்பு கூறியிருந்தார்.

Related posts

பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர் – 5,000 யூரோக்கள் அபராதம்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – தென் கொரியாவில் மக்கள் போராட்டம்

editor

அயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு