உள்நாடு

இடைக்கால அரசிலும் மஹிந்தவே பிரதமர் : PAFFREL கண்டனம்

(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் இடைக்கால அரசாங்கம் அமையும் பட்சத்தில் அது தனது தலைமையில் அமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்து, தற்போதைய நிர்வாகம் அதற்கு செவிசாய்க்கத் தயாராக இல்லை என்பதையே தெளிவாகக் காட்டுகிறது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த PAFFREL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.

தேர்தல் மூலம் மக்களின் உணர்வுகள் வெளிப்படுவதை அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

அரசியலமைப்பை மீறுமாறு எந்தவொரு தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு செயற்படுமாறும் தாம் கோருவதாக ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

மேலும், ஒன்றிணைந்த எதிரணியின் அவசியத்தை வலியுறுத்திய அவர், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியை போக்குவதற்கு பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது எதிர்கட்சிகளும் தத்தமது அரசியல் நலன்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக PAFFREL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

முட்டை, கோழி இறைச்சியின் விலைகள் வேகமாக குறைந்து வருகிறது

editor

04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

editor

அனைத்து இபோச பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும்