உள்நாடு

அரசுக்கு ஆதரவு வழங்கிய மூவர் எதிர்கட்சியில் அமர்ந்தனர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், இஷாக் ரஹ்மான் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகி இன்று (20) பிற்பகல் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்.

பைசல் காசிம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி இஷாக் ரஹ்மான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தம் மீதான வாக்கெடுப்பின் போது, ​​மூவரும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் வழமைக்கு

கடைக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

editor

அறிவுறுத்தல்களை மீறினால் 119 இற்கு அழைக்கவும்