வகைப்படுத்தப்படாத

ஹட்டன், நுவரெலிய கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UDHAYAM, COLOMBO) – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயத்தை முன்னிட்டு, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மலையகத்துக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர், டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளதுடன், நோர்வூர் மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில், ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள தமிழ், சிங்கள பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.எம். விஜேரட்ன எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Related posts

Beliatta Pradeshiya Sabha Chairman arrested

93 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக் தாக்கல் நிறைவு

வித்தியாவிற்கான நீதி விசாரணை! ஏமாற்றாதே