உள்நாடு

இந்தியாவில் இருந்து ஒருதொகை அரிசி இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசியில் ஒரு பகுதி இன்று (11) இலங்கை வந்தடையும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கிடைத்தவுடன் அதனை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு மற்றும் கெகுழு அரிசி கிலோ ஒன்று 110 ரூபாவிற்கும் சம்பா கிலோ ஒன்று 130 ரூபாவிற்கும் சதொச ஊடாக விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி

editor

சி.சி.ரி.வி கட்டமைப்பு – இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய

editor