உள்நாடு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதியால் ஆலோசனைக் குழு நியமனம்

(UTV | கொழும்பு) – பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மை குறித்த ஆலோசனை குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் பதில் தலைமை பொருளியலாளர் பேராசிரியர் சாந்த தேவராஜன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஷர்மினி குரே ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணல் மற்றும் இலங்கையின் நிலையான மீட்சிக்கு அவசியமான வழிகாட்டுதல்களை வழங்குதல் என்பன ஆலோசனைக் குழுவின் பொறுப்புக்களாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No photo description available.

Related posts

எமது நாட்டின் முக்கிய உயிர்நாடியாக இருப்பது பெண்களே – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம்

editor

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”