உள்நாடு

ஊரடங்கு சட்டத்தினை நீடிக்க இதுவரையில் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை நாளை காலை 6 மணிக்குப் பின்னர் நீடிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அறிவித்தபடி ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

உங்கள் கொட்டத்தை அடக்க போகிறோம் – தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் – இருவர் படுகாயம்

editor

பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்திற்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

விவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா