உள்நாடு

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதனை ஏற்றுக் கொள்ள முடியாது

(UTV | கொழும்பு) – சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதனை தாம் ஏற்றுக்கொள்ளபோவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவொனறை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதில், சமூக வலைத்தளங்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகள் பயனற்ற செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தானும் தற்போது VPN வழிமுறையைப் பயன்படுத்தி சமூக வலையமைப்புகளை பயன்படுத்துவதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, மேலும் நெருக்கடிகளை உருவாக்காமல், பிரச்சினைகளுக்கான தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் ட்விட்டர் பதிவின் மூலம் கோரியுள்ளார்.

Related posts

உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு – அரச ஓய்வூதியர்களின் தேசிய இயக்கம் இணக்கம்.

மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்ட இன்று மக்கள் பாவனைக்கு

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெயராமுடன் மஹிந்த தொடர்பு ???