உள்நாடு

கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக தீக்கிரை

(UTV | கொழும்பு) – கொழும்பு – பாலத்துறை – கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்றிரவு 12.30 அளவில் தீ பரவியதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 தண்ணீர் பாரவூர்திகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

எனினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

போதியளவு ஓட்டோ டீசல் கையிருப்பில்

“அஸ்வெசும” 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது – அமைச்சர் செஹான்

அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் – இல்லாத பட்சத்தில் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் – ரணில்

editor