உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றும் (22) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே, P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும், மாலை 5மணி முதல் இரவு 09.00 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு

சட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை கட்டுபடுத்த முடியும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

சமூக ஆர்வலர் பியத் நிகேஷல கைது!