உள்நாடு

பொதுமக்களின் எதிர்ப்பால் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு இரத்து

(UTV | கொழும்பு) – மீரிகமவில் இருந்து கல்பிட்டி ஊடாக அனுராதபுரம் வரை “ஸ்பின் ரைடர் கிளப்” என்ற தனியார் மோட்டார் சைக்கிள் கிளப் ஏற்பாடு செய்த மூன்று நாள் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக பொலிஸாரால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு பண நன்கொடை மற்றும் கல்பிட்டியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விநியோகம் என்பவற்றுக்கு அமைவாக குறித்த அணிவகுப்பை நடத்த அனுமதி கோரியதாக பொலிசார் தெரிவித்தனர்.

அறநிலையத்துறை தொடர்பாக சட்டரீதியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பதால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசு கட்டணம் வசூலித்து அனுமதி வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் இணக்கப்பாடுகளை மீறியமை காரணமாக கல்பிட்டியிலிருந்து அனுராதபுரம் வரை நடைபெறவிருந்த அணிவகுப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டத்திற்கு முரணாக செயற்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கல்பிட்டி சசனரக்ஷக பலமண்டல தலைவர் வண. மிகெட்டுவத்த சுமித்த தேரர் பெரும்பாலான மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் போது இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி தலுவ சந்தியில் அணிவகுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

அதி சொகுசு வாகனங்கள் மற்றும் அதிக இயந்திர திறன் கொண்ட சுமார் 300 மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்பில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

ஜனாதிபதி அநுர எளிமையானவர் – மக்கள் எதிர்பார்க்கும் எதிர்காலத்தை அவர் நிச்சயம் வழங்குவார் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

வலப்பனை- கண்டி வீதி மூடப்பட்டது

ஆசிரியர் சேவை சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்