(UTV | கொழும்பு) – எரிபொருள் விலையில் திருத்தம் செய்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வலியுறுத்தியுள்ளது.
இன்று உலக எண்ணெய் விலையுடன் ஒப்பிடும் போது அரசாங்கத்திற்கு எரிபொருளுக்கான செலவு மிகவும் அதிகமாக உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை அண்மைய நாட்களில் சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தேவைக்கு அதிகமான எரிபொருளை நுகர்வோர் எடுத்துச் செல்வதன் காரணமாக எரிபொருள் பாவனை அதிகரித்த போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் திரு.விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.