உள்நாடு

“தனது பதவியை இராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை” [VIDEO]

(UTV | கொழும்பு) – வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்நாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

சில சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் மீண்டுமொரு அமைச்சரவை பதவியை பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும், இரண்டு அமைச்சரவை அமைச்சர்களை வழங்குவதன் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு மேலும் பலவற்றைச் செய்ய முடியும் எனவும் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (04) ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவியில் இருந்துகொண்டு எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதி கோரி பம்பலப்பிட்டி பாடசாலைக்கு முன்னால் போராட்டம்

editor

முடங்கியது காத்தான்குடி

சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்.

editor