உள்நாடு

கம்பஹா ஒரு பாராளுமன்ற ஆசனத்தை இழந்தது, யாழ் ஒன்றினை பெற்றது

(UTV | கொழும்பு) – தேர்தல் பதிவின் பிரகாரம் கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் 19ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்திற்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் சேர்க்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மொத்த ஆசனங்கள் 6ல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்படும்.

எதிர்வரும் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு வரவிருந்த உப்பு கப்பல் தொடர்பில் வெளியான தகவல்

editor

கட்டுப்பணத் தொகை ரூ.3 மில்லியன் வரை அதிகரிக்க யோசனை

நீர் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி