உள்நாடு

மைத்திரி தென்கொரியாவுக்கு

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவில் இடம்பெறும் உலக சாமாதான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேற்றிரவு தென் கொரியாவை சென்றடைந்தார்.

இதன்படி நேற்று முன்தினம் (07) கொரிய தூதுவர் Woonjin JEONG உடன் இடம்பெற்ற உலக சமாதான மாநாடு தொடர்பான கலந்துரையாடலில், கொரியா மற்றும் இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து அவர் கலந்துரையாடினார்.

கொரிய தூதுவருடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றமை தொடர்பிலும் தூதுவர் முன்வைத்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களையிட்டும் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அதற்காக நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Related posts

எம்மால் செய்ய இயலுமானதை செய்வதே எமக்கு தேவையானது – பிரதமர் ஹரிணி

editor

செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதி பலி

editor

பாரிய அளவில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது – இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை – ஜோசப் ஸ்டாலின்

editor