உள்நாடு

தாதியர் சங்கத்திற்கு சுகாதார அமைச்சரிடமிருந்து கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – தொடரும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வரும் அரச தாதியர் சங்கத்தினருடன் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார வல்லுநர்கள் சம்மேளனம் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின் போது எட்டப்படும் தீர்வுகளை பொறுத்தே பணிப்புறக்கணிப்பின் எதிர்காலம் அமையும் என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பிள்ளையானின் பல குற்றச்சாட்டுக்கள் வெளிச்சத்திற்கு வருகிறது

Shafnee Ahamed

மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

editor

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!