உள்நாடு

பேச்சுவார்த்தை மிகவும் வினைத்திறனாக அமைந்தது

(UTV | புதுடில்லி) –  இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இன்று சந்தித்தார்.

இது குறித்து ட்விட்டர் பதிவொன்றின் மூலம் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மிகவும் வினைத்திறனாக இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – இந்திய ராஜதந்திர உறவின் 75 ஆம் ஆண்டு பூர்த்தியைப் பொருத்தமான முறையில் அனுஷ்டிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பொருளாதாரத்தை சக்திமயப்படுத்தல், அதற்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும், இந்த விடயத்தில் இரண்டு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர பொறிமுறை ஒன்றை விரைவில் கொண்டுவர வேண்டும் என இணங்கப்பட்டதாகவும் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மீண்டும் உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

editor

உதயமாகியது இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம்!

editor

முட்டை விலை குறையும்