உள்நாடு

சுங்கத்தில் சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது குறித்து இன்று கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் இன்று (01) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உரிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலர் கையிருப்பை பெற்றுக் கொள்வது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கோரிக்கை

ஈ – காணி பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

கொரோனா : பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு