உள்நாடு

நாடு திறந்திருக்க கொரோனாவை கட்டுப்படுத்துவதே அரசின் தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எனினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு திறந்திருக்கும் போதே, ​கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால், சகலரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

சுகாதார அமைச்சரின் திடீர் விஜயம்

editor

அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து நீக்கம்!