உள்நாடு

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – சாட்சிகளை விசாரிக்க திகதி நியமனம்

(UTV | கொழும்பு) – கடந்த ஆட்சி காலத்தில் பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பான சாட்சிய விசாரணைகளை ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த வழக்கின் சாட்சிய விசாரணைகளை எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு தொடர்பான சாட்சிய விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையர்கள் 278 பேர் நாடு திரும்பினர்

இலங்கையின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு

editor

பிரசன்ன ரணவீரவுக்கு உதவி பிரதம கொறடா பதவி