உள்நாடு

தென் கொரிய சபாநாயகர் இலங்கைக்கு வருகை

(UTV | கொழும்பு) – தென் கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சூக் (Park Byeong-seug) உள்ளிட்ட 18 பேர் அடங்கிய தூதுக்குழு 04 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (19) நாட்டை வந்தடைந்துள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரால் தென் கொரிய சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அரச அதிகாரிகளை தென் கொரிய சபாநாயகர் சந்திக்கவுள்ளார்.

மேலும், இலங்கை பாராளுமன்றத்திற்கும் தென் கொரிய சபாநாயகர் விஜயம் செய்யவுள்ளார்.

Related posts

யாழ். கொடிகாமத்தில் விபத்து – ஒருவர் படுகாயம்.

சாதாரணதர பெறுபேறுகளை கணனிமயப்படுத்தும் நடவடிக்கை

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகச் செயலமர்வு!