உள்நாடு

பல்கலைக்கழக செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்து உடனடியாக முழு எண்ணிக்கையிலான மாணவர்களுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஒரு சந்தர்ப்பத்தில் 50 சதவீத மாணவர் எண்ணிக்கையுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சகல மாணவர்களையும் உடனடியாக அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.

இந்நிலையில் பரீட்சைகளை நடத்துதல், இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகள் என்பன தற்போது பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை

பொருளாதார, முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்த ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம்

editor

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!