உள்நாடு

அனைத்து தூர பிரதேச ரயில் சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில அலுவலக ரயில் சேவைகளும் மற்றும் அனைத்து தூர பிரதேச ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 80 க்கும் அதிகமான அலுவலக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துள்ளது.

ரயில் பயண கால அட்டவணை, ரயில் ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தெஹியத்தகண்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

editor

துருக்கி நாட்டின் “ஜனநாயக மற்றும் தேசிய ஒற்றுமை தினம்” இன்று கொழும்பில் அனுஷ்டிப்பு !

editor

வெலிகம சஹான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

editor