உள்நாடு

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று

(UTV | கொழும்பு) – அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று (06) வௌியிடப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் திட்டத்திற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.

ஓய்வு பெறும் வயது 62 ஆக காணப்பட வேண்டும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தினூடாக குறித்த சங்கம் இதனை தெரிவித்திருந்தது.

Related posts

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்.

பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – பணி நீக்கம் செய்யப்பட பராமரிப்புத்துறைஉதவிப் பணியாளர்!

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் உண்மை நிலையை அறிந்துகொள்ள விசேட தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor