உள்நாடு

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –   இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது.

இவற்றின் வர்த்தக பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இதற்கான காரணமாகும். நிதியமைச்சு கடந்த 31 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் சம்பந்தமாக சுங்கவரியை 30 ரூபாவினால் குறைத்திருந்தது.

சந்தையில் இவற்றுக்கு இருந்த விலையை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

இதற்கமைவாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நிதியமைச்சரின் அங்கீகாரத்துடன் சம்பந்தப்பட்ட வரி குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி

பாரிய உப்பு மாபியா இடம்பெற்று வருகிறது – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor

சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்