உள்நாடு

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் மேலதிக பரிசோதனை சிலவற்றை மேற்கொள்வதனால், அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடுமென்று ‘லிட்ரோ கேஸ் நிறுவனம்’ அறிவித்திருக்கிறது.

சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு மேலதிகமாக புதிதாக இன்னும் சில பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதேவேளை, சமையல் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 54 வேட்பாளர்களும், 204 ஆதரவாளர்களும் கைது!

editor

பொலிஸ் அதிகாரிகள் மைத்திரி இல்லத்திற்கு