உள்நாடு

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று(24) முதல் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நத்தார் பண்டிகையின்போது, தேவாலயங்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கத்தோலிக்க மதகுருக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்புத் திட்டத்தை வகுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துமாறும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உளவுத் தகவல்களை சேகரித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியம் தொடர்பில் வந்த தகவல்

editor

கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

editor

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த வத்திக்கான் தூதுவர்!

editor