உள்நாடுவணிகம்

சதொச’வில் குறைந்த விலையில் 50 அத்தியாவசிய பொருட்கள்

(UTV | கொழும்பு) –  பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (12) முதல் வருட இறுதி வரையில், சதொச வர்த்தக நிலையங்களில், சில வகையான அரிசிகளை, 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச வர்த்தக நிலையங்களில், 50 அத்தியாவசிய பொருட்களை இன்று முதல் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு அரிசி ஒரு கிலோகிராம் 99 ரூபா 50 சதத்திற்கும், சிறந்த சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபா அளவிலும் சதொச வர்த்தக நிலையங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

எந்தவொரு அரிசி வகையையும், சதொசயில் தலா 5 கிலோகிராம் அளவில் பெற்றுக்கொள்ள முடியும்.

சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோகிராம் 240 ரூபாவுக்கும், நூடில்ஸ் ஒரு பைக்கற்று 125 ரூபாவுக்கும், சவர்க்காரம் உள்ளிட்ட 50 பொருட்களை, சந்தையில் நிலவும் விலையை விடவும், குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், பிரதமர் சந்திப்பு

editor

கல்வித்துறையில் புதிய சகாப்தம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துங்கள் – அரசிடம் அஷ்ரப் தாஹிர் எம்.பி கோரிக்கை

editor