உள்நாடு

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 2.5 மில்லியன் நன்கொடை

(UTV | கொழும்பு) – பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கொடூரமாக தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்ப நலனுக்காக நன்கொடை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர் நலன்புரி நிதியத்திலிருந்து 2.5 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வி அமைச்சின் அறிவித்தல்

இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்