உள்நாடு

இரு நாள் இந்திய விஜயத்தில் பசில் ராஜபக்ஷ

(UTV | கொழும்பு) – இந்தியாவுக்கு சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று அங்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளார்.

நேற்று இரவு அவர் இலங்கையில் இருந்து இந்தியாவின் தலைநகர் புதுடில்லியை சென்றடைந்தார்

இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் பசில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரச அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சித்தாராமனையும் அவர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இதன்போது இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான கடன் வசதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேசப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.

Related posts

பிள்ளையான் பிணையில் விடுதலை

நகர மண்டப வீதி பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் – ஒரே பார்வையில்

editor