உள்நாடு

தீ விபத்தினால் சிறுமி பலி

(UTV |  வெலிகம) – மாத்தறை – வெலிகம பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (30) இரவு ஏற்பட்ட இந்த தீவிபத்தின் போது, அறையின் மேற்கூரை சரிந்து, அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்த சிறுமி மீது விழுந்துள்ளது.

இந்த தீ விபத்தின் போது அருகில் உள்ள அறையில் இருந்து சிறுமியின் பாட்டி மற்றும் 13 வயது சகோதரி ஆகியோர் அங்கிருந்து வெளியில் சென்றதால் உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தம் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

editor

Astra Zeneca தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்

ஹிருணிகாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை