உள்நாடு

இந்து சமுத்திர மாநாட்டில் முன்னாள் பிரதமர்

(UTV | கொழும்பு) –  ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் ‘சுற்றுச்சூழல், பொருளாதாரம், தொற்றுநோய்’ ஆகும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இந்த மாநாட்டில் மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் எதிர்வரும் 5ம் திகதி குறித்த மாநாட்டில் உரையாடவுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பெருங்கடல் மன்றத்தின் முன்னாள் தலைவராக 2016 முதல் 2019 வரை பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் பயணிக்கத் தடை

“இலங்கைக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை” நிமல்

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்