உள்நாடு

எரிவாயு கொள்கலன்களின் கலவை குறித்த ஆய்வக அறிக்கை இன்று மாலை

(UTV | கொழும்பு) –  சமையல் எரிவாயு கொள்கலன்களின் கலவை தொடர்பான ஆய்வக அறிக்கையை இன்று (27) மாலை 5 மணிக்குள் பெற்றுக் கொள்வதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று(27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் கருத்தின்படி, கடந்த சில நாட்களில், எந்த இடத்திலும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு இடம்பெறவில்லையென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருந்தார்.

சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு தொடர்பில் வெளியாகும் தகவல் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(27) சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அனைவரும் ஒருமனதுடனும் ஒற்றுமையாகவும் கைகோர்ப்போம் – வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா உறுதி

சர்வதேச நீதியைக் கோரி மக்கள் ஜனநாயகப் போராட்டம்!