உள்நாடு

ஆறு நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை

(UTV | கொழும்பு) – ஆறு நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்தே இலங்கைக்கு வருகைத் தர இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிடுகின்றது.

இதேவேளை, குறித்த நாடுகளிலிருந்து எவரேனும் வருகை தந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை

editor

முன்னாள் எம்.பி நிதியமைச்சின் செயலாளராக நியமனம்

editor

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் விசேட அறிவிப்பு

editor