உள்நாடு

மதுபான விலைகளில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – நேற்றைய வரவு செலவுத் திட்ட முன்வைப்பை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 1) 96 ரூபாவினாலும், 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 2) 103 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

750 மில்லிலீற்றர் கொண்ட வெளிநாட்டு மதுபானத்தின் விலை 126 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய மதுபானங்களான 750 மில்லிலீற்றர் கொண்ட வைன் ஒன்றின் விலை 14.40 ரூபாவினாலும், பியர் (330மி.லீ – 5%க்கும் குறைந்த) விலை 3 ரூபாவினாலும், பியர் (330மி.லீ- 5 %க்கும் அதிகமான) விலை 14.96 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

   

Related posts

களுத்துறை மாணவி மரணம் –  நீதி மன்றின் முன்பாக பெற்றோர் மௌன போராட்டம்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

பலஸ்தீன மண்ணில் புத்தாடைக்கு பதிலாக இரத்த ஆடை அணிந்த படி வலி கொண்ட பெருநாளை அனுபவித்துக் கொண்டிருப்பதை கனத்த மனதுடன் ஞாபகப்படுத்தி உணர்வுகளால் பங்கு கொள்கிறேன் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் உதுமாலெப்பை எம்.பி

editor