உள்நாடு

மண்மேடு சரிந்து விழுந்ததில் இளம் தாதி பலி

(UTV |  குருநாகல்) – அலவ்வ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாரம்மல, வென்னொருவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மண்மேட்டில் மூவர் சிக்கியுள்ளதுடன் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாயும் மகனும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய மகள் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக கடமையாற்றும் 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழ்ப்பாணத்தில் ரயிலில் சிக்கி யுவதியின் கால் துண்டான துயரம்

editor

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் – இருவர் கைது

editor

ஜனாதிபதி – கூட்டமைப்பு இடையே சந்திப்பு