உள்நாடு

பாராளுமன்ற விசேட அமர்வு கூடியது

(UTV | கொழும்பு) –  இன்று (08) பாராளுமன்றம் விசேட அமர்வு தினமான காலை 10.00 மணியளவில் கூடியது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் உரிய வகையில் இடம்பெறாமையினால், சபையில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்க முடியாமல் இருந்தது. எனவே, கேள்விகளுக்கு பதிலளிக்க இன்றைய தினம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அமைச்சரவை அமைச்சர்களுக்காக 50 கேள்விகள் காணப்படுகின்றன.

அரசாங்கத்தின் சார்பில் அதற்குப் பதிலளிப்பதற்காக மாத்திரம் விசேட பாராளுமன்ற அமர்வுகள் இரண்டு தினங்களுக்கு கூட்டப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேலும் அறிவித்துள்ளார்.

Related posts

இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சை நாளை மீண்டும் ஆரம்பம்

editor

கடந்த 24 மணிநேரத்தில் 13,320 வழக்குத் தாக்கல்

பெரஹரா ஊர்வலத்தில் யானை திடீர் குழப்பம்

editor