கேளிக்கை

டாப்ஸி தயாரிப்பில் ‘சமந்தா’

(UTV |   மும்பை) – டாப்ஸி தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் டாப்ஸி. இவரது படங்களுக்கென்றே தனி வியாபாரம் நடைபெறும் அளவுக்கு வளர்ந்துள்ளார். மேலும், புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி ‘ஃப்ளர்’ என்ற படத்தைத் தயாரித்தும் வருகிறார்.

தனது படங்களை மட்டுமன்றி, ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் மூலம் இதர நடிகர்களின் படங்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளார் டாப்ஸி. அந்த வரிசையில் இவருடைய தயாரிப்பில் நாயகியை மையப்படுத்திய த்ரில்லர் கதை ஒன்று தயாராகவுள்ளது.

இதில் நாயகியாக சமந்தா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது. டாப்ஸி தயாரிப்பில் சமந்தா நடிக்கவுள்ளதை பாலிவுட் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நாக சைதன்யா உடனான பிரிவுக்குப் பிறகு, பல்வேறு கதைகளைக் கேட்டு வருகிறார் சமந்தா. விரைவில் இவருடைய பாலிவுட் அறிமுகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Related posts

reema lagoo உயிரிழந்தார் – [VIDEO]

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த மிரட்டும் Jurassic World: Fallen Kingdom ட்ரைலர் இதோ

இணையத்தில் வைரலாகும் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர்.. யாரு ?.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!